பிரதான செய்திகள்

ஹிஸ்புல்லாஹ்வின் 25வருட அரசியல்! நாளை நுால் வெளியீடு

‘கிழக்கின் அரசியல் பின்னணியும் ஹிஸ்புல்லாஹ்வின் 25 வருட அரசியல் பதிவுகளும்” எனும் தொனிப் பொருளில் ‘கிழக்கு வாசல்” எனும் நூல் தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் சமூக விஞ்ஞான பிரிவினால் நாளை (10) திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.

நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மேற்படி நிகழ்வு நடைபெறவுள்ளது.

தென்கிழக்கு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாலளர் டாக்டர். றமீஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

அத்துடன்,  நூலின் கதாநாயகன் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Related posts

கூட்டுறவுக்கொள்கை நவீனமயப்படுத்தப்படும் அமைச்சர் றிஷாட்

wpengine

இரண்டு முகக் கவசங்கள் அணிவது பொறுத்தமற்றது வைத்தியர் ரஞ்சித்

wpengine

1200க்கு தூக்கில் தொங்கிய 17வயது இளைஞன்

wpengine