உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஹிஜாப் விவகாரம் இந்தியாவில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.

கர்நாடகாவிலுள்ள கல்வி நிறுவனங்களின் ஆடைக் கட்டுப்பாடு விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு ஏனைய நாடுகளை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

சில நாடுகளின் கருத்துக்களுக்கு இந்தியாவின் பதில் தொடர்பாக ஊடகங்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கர்நாடகாவிலுள்ள சில கல்வி நிறுவனங்களின் ஆடைக் கட்டுப்பாடு விவகாரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதித்துறை விசாரணையில் உள்ளது எனவும் தங்களது உள் விவகாரங்களில் ஊக்கமளிக்கும் கருத்துக்கள் வரவேற்கப்படாது என்றும் அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நடந்து வரும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியாவின் பொறுப்பாளர்களுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய மாணவிகள் சிலர், கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திலுள்ள அரச மகளிர் கல்லூரியில்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இது தொடர்பான அவசர மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வன விலங்குகள் மற்றும் இயற்கை வள அழிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

wpengine

500 கோடி அளவில் மோசடி! கணவன் தனது மனைவியால் படுகொலை

wpengine

பல இளம் பெண்களை ஏமாற்றி பணம் பெற்றவர் கைது – அவிசாவளையில் சம்பவம்!

Editor