செய்திகள்பிரதான செய்திகள்

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய நபருக்கு 19 வரை விளக்கமறியலில்.

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை – பதகிரிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

இவர் (06) திகதி தனது தந்தையின் பிறப்பு சான்றிதழ் நகல் பெறுவதற்காக  பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு வந்து அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

எனினும், ஆவணங்களைப் பெறுவதற்கு நேரமாகியதால் ஆத்திரமடைந்த குறித்த நபர், அலுவலகத்தில் பலரிடம் கேட்டும் உரிய பதில் அளிக்காததால், அலுவலகத்தில் இருந்த நாற்காலியை எடுத்து மேசை, ஜன்னல்களை தாக்கியுள்ளார்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபர் மன உளைச்சலுக்கு ஆளானவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்தனை சந்தித்த மகாநாயக்க (படம்)

wpengine

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி உதயம் (விடியோ)

wpengine

அதாவுல்லாஹ், சாபிஸ் மோதல் உச்சகட்டம் அடைந்துள்ளது

wpengine