பிரதான செய்திகள்

ஹட்டனில் மே தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மே தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹட்டன் நகரில் கவனயீரப்புப் போராட்டம் முன்னெடுக்ககப்பட்டுள்ளது.

மலையக சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக  பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாள் சம்பளம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும், தொழிலாளர்களுக்கான சலுகைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.8af68e8d-bec9-4522-a2d1-b235372276e6-1

தங்களின் கோரிக்கைகளுக்கு பதில் வழங்கா பட்சத்தில் மலையகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டங்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து விலக வேண்டும்.

wpengine

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு! உபகரணங்கள் வழங்கவில்லை

wpengine

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் விசேட அறிவிப்பு!

Editor