கட்டுரைகள்பிரதான செய்திகள்

ஹக்கீமை போன்று றிஷாட் நடந்துகொள்ள கூடாது! புத்தளத்தில் நாகரீகம் தவறிய ஹக்கீம்

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

யார் என்னதான் சொன்னாலும் அமைச்சர் ஹக்கீம் நாகரீகமான முறையில் நடந்து கொள்ளும் பண்புடையவர்.இப்படித் தான் நான் இது வரை காலமும் நினைத்து வந்தேன்.அந்த நினைப்பை அமைச்சர் ஹக்கீம் நேற்றுமுன் தினம் புத்தளத்தில் ஆற்றிய உரையில்  தவிடு பொடியாக்கியிருந்தார். புத்தளத்தில் இடம்பெற்ற பாயிஸை வரவேற்கும் எழுச்சிக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாதின் தனிப்பட்ட விடயங்கள் பற்றியெல்லாம் மிகவும் கீழ்த் தரமான முறையில் நகைச்சுவைப் பாணியில் கதை அளந்திருந்தார்.அமைச்சர் றிஷாதின் மீது ஊழல் செய்தார் என்ற பகிரங்க குற்றச் சாட்டை முன் வைத்திருந்தார்.இங்கு ஒரு விடயத்தை கூறியாக வேண்டும் அமைச்சர் றிஷாதை ஊழல் வாதியாக மட்டுமல்ல இன்னும் சில விடயங்களில் அகப்பட செய்ய ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவர் மிகவும் முனைப்பு காட்டி வசமாக மாட்டிய வரலாறுகளும் உண்டு.தேவையான நேரத்தில் விபரமாக கூறுகிறேன்.

அமைச்சர் ஹக்கீமின் ஆதரவாளர்கள் சிலருக்கு அமைச்சர் றிஷாதை ஊழல் வாதியென கூறுவதில் அலாதிப் பிரியம்.இதனை தடுக்க வேண்டிய அமைச்சர் ஹக்கீம் நேற்று அவர்களது போராளிகளுக்கு அமைச்சர் றிஷாதை ஊழல் வாதியென கூறியதன் மூலம் இன்னும் உற்சாகப் படுத்தியுள்ளார்.இவர் தான் முஸ்லிம் சமூகத்தை சிறந்த முறையில் வழி நடாத்தப் போகிறாராம்.அமைச்சர் றிஷாத் ஊழல் வாதியென்றால் அவர் முஸ்லிம் மக்களை வழி காட்ட தகுதியற்றவர் என்பதில் என்னிடமும் மாற்றுக் கருத்தில்லை.ஆனால்,அது ஆதாரங்களுடன் தெளிவாக நிரூபணமாக வேண்டும்.அரசியல் பிரபலங்கள் மீது ஊழல் குற்றச் முன் வைக்கப்படுவது வழமை.அவர்கள் ஊழல் செய்திருப்பார்களா என விசாரணை நடைபெறுவதெல்லாம் வழமை.அமைச்சர் ஹக்கீம் மீதில்லாத குற்றச் சாட்டுகளா? தோம்புக் கண்டத்தில் வைத்து பதினெட்டாம் அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவளிக்க பணம் வாங்கிய விடயம் வார நாளிதலொன்றில் சந்தி சிரித்த விடயம் அமைச்சர் ஹக்கீமிற்கு மறந்து போனதா? இது மட்டுமா? வேண்டாம் அமைச்சரே! வேண்டாம்!

அமைச்சர் ஹக்கீம் அமைச்சர் றிஷாதை விமர்சிப்பதானால் அவரின் அரசியல் செயற்பாடுகளை விமர்சித்திருக்கலாம்.அது ஆரோக்கியமான விடயமும் கூட.அதை விட்டு விட்டு அவரது தனிப்பட்ட விடயங்கள் பற்றி விமர்சித்தமை நாகரீமற்ற செயலாகும்.இது இயலாமையின் வெளிப்படும் கூட.இது நாகரீமற்ற விடயமென நான் சொன்னால் நீங்கள் ஏற்காமல் போகலாம்.இதனை அமைச்சர் ஹக்கீமே தனது புனித வாயால் சொன்னாலாவது நீங்கள் (மு.காவின் வெறித்தனமான ஆதரவாளர்கள்) ஏற்பீர்களா? குறித்த மேடையில் அமைச்சர் ஹக்கீம் அமைச்சர் றிஷாதின் தனிப்பட்ட விடயங்கள் பற்றி கதைத்து விட்டு அவர் (அமைச்சர் றிஷாத்) பற்றி கதைப்பது நாகரீகத்திற்கு அப்பாற்பட்ட விடயம் என்று அவரே கூறியிருந்தார்.அமைச்சர் றிஷாத் பற்றி மிகவும் கீழ் தரமாக விமர்சித்துவிட்டு அவர் பற்றி கதைப்பது நாகாரீகமற்ற செயல் என்றால் அவர் தனக்கு தானே நாகரீகமற்றவர் என்ற சான்றிதழை வழங்கியுள்ளமை துல்லியமாகிறது.அமைச்சர் ஹக்கீம் மேர்வின் சில்வாவைப் பற்றி கதைத்த விடயத்தில் மேர்வின் சில்வாவை அரசியல் ரீதியாகவே விமர்சித்துள்ளேன்.தனிப்பட்ட முறையில் எனது நண்பனென கூறியிருந்தார்.இதன் போதும் தான் அரசியல் நாகரீகம் என்பதை அமைச்சர் ஹக்கீம் கூறியிருந்தார்.இந்த நாகரீகத்தை அமைச்சர் ஹக்கீமால் அமைச்சர் றிஷாதின் விடயத்தில் கடைப்பிடிக்க முடியாமல் போனதேன்?

இதற்கு பதிலடியாக அமைச்சர் றிஷாத் அமைச்சர் ஹக்கீமின் தனிப்பட்ட விடயங்கள் பற்றி கிளறினால் என்ன நடக்கும்? அமைச்சர் ஹக்கீம் மீது இன்றும் கரும்புள்ளியாகவுள்ள குமாரி விடயம் பற்றி அமைச்சர் றிஷாத் நன்கே அறிவார்.இது பற்றி அவர் மேடைகளில் லோயர் சஹீத் காப்பாற்றியதிலிருந்து ஆரம்பித்தால் நன்றாகவா இருக்கும்.இந்த நாகரீகமற்ற பாணியை அமைச்சர் றிஷாத் ஒரு போதும் கடைப்பிடிக்கக் கூடாது என்பது எனது அவா.இந்த நாற்றங்கள் வெளிச் செல்லும் போது எமது சமூகத்திற்கே கேவலம்.

 

 

Related posts

அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனம் ஜனாதிபதிக்கு கடிதம்

wpengine

பாக்கிஸ்தானின் 76 வது தேசிய தினம் இன்று!

wpengine

ராவண பலய அமைப்பின் சொந்த தேவைக்கு 7 வாகனம் கொடுத்த விமல் வீரவன்ச

wpengine