பிரதான செய்திகள்

ஹக்கீமும் ரிஷாத்தும் புத்தளத்தில் இணைகிறார்கள்.

புத்தளத்து வென்றெடுக்கப்பட்ட பாராளுமன்றம் உறுப்பினர் கனவு நனவாகப் போகிறது.

மரமோ,மயிலோ,வேறு பொதுச்சின்னமோ. புத்தளம் தொகுதியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வென்றெடுக்க வேண்டிய விட்டுக்கொடுப்புக்கு தானும் தன் கட்சியும் தயார் என்ற பகிரங்க அறிவிப்பை முன்னாள் அமைச்சர் ரிஷாத் ஏற்கனவே விடுத்திருந்த அதே வேளை..
மு.காவின் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களும் இதனை வரவேற்று பச்சை கொடி காட்டியுள்ளார்..

இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு இணங்க, புத்தளத்தில் இரு தரப்பாரும் இணைவதுடன் , மேலும் சில பிரபலங்களையும் இணைத்துக்கொண்டு மு.கா வின் மரம் சின்னத்தில் போட்டியிடுவது என்ற ஏகோபித்த முடிவுக்கு வந்துள்ளதாக அறிய முடிகிறது..

கே.ஏ.பியும் இதற்கு பூரண சம்மதம் தெரிவித்துள்ளார் என்பதும் விஷேட அம்சமும் ஆகும்.

Related posts

தேர்தல் ஒழுங்குகளை மீறிய அரச பணியாளர்கள்

wpengine

அமைச்சுப் பதவி எனக்குத் தேவையில்லை-பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன்

wpengine

சஜித் விலகல்! டளஸ்சுக்கு ஆதரவு

wpengine