பிரதான செய்திகள்

ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் வேண்டுகோலுக்கு ஏற்ப சாய்ந்தமருதுக்கு அரசகரும மொழிகள் ஆய்வுகூடம்.

(Ashraff. A. Samad)

சாய்ந்தமருதுக்கு அரசகரும மொழிகள் ஆய்வுகூடம் ஒன்றை அமைப்பதற்கு ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா தேசிய அமைப்பு விடுத்த வேண்டுகோளுக்கு, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

மிக விரைவில் அரசகரும மொழிகள் ஆய்வுகூடத்தை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா தேசிய அமைப்பின் தலைவர் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் இதற்கான வேண்டுகோள் கடித்தை அமைச்சரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் அமைப்பின் பிரதி தலைவர் சியாம் ஆப்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

‘இலங்கையின் ஆடைகள் தரமானதால் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது’

wpengine

பீ.எஸ்.எம்.சாள்ஸ், வட மாகாண ஆளுநராக நியமனம்

wpengine

புத்தளத்தில் வெள்ளம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்-மாவட்டச் செயலாளர்

wpengine