பிரதான செய்திகள்

ஸ்கந்தா நிதிய அங்குரார்ப்பண நிகழ்வில் சித்தார்த்தன் (பா.உ.)

ஸ்கந்தா நிதியத்தின் (Skanda Foundation) அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (02.12.2017) சனிக்கிழமை மாலை 5.30மணியளவில் கொழும்பு பம்பலப்பிட்டி அரச மாடிவீட்டு தொகுதியில் அமைந்துள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மேல் மாகாண ஆளுநர் திரு. லோகேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றல், தேவாரம், தமிழ்த் தாய் வாழ்த்து இடம்பெற்றன. தொடர்ந்து ஸ்கந்தா நிதியத்தின் இயக்குநர் Dr. சிவகுமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஸ்கந்தா நிதியத்தின் தலைவர் Dr. சக்திவேல் அவர்கள் உரையினைத் தொடர்ந்து ஸ்கந்தா நிதிய இணை நிறுவுனர் திரு. மகேந்திரலிங்கம் அவர்கள் ஸ்கந்தா நிதியத்தினை அங்குரர்ப்பணம் செய்து வைத்தார்.

நிகழ்வில் மகாஜன நிதிய இயக்குநர் திரு. ஜெயவர்மன், ஸகந்தவரோதயா கல்லூரியின் அதிபர் திரு. செல்வஸ்தான், ஸ்கந்தவரோதய ஆரம்பப் பாடசாலையின் அதிபர் தயானந்தா, திரு. வி.சிவஞானசோதி, ஸ்கந்தா நிதிய இயக்குநர் சபை உறுப்பினர்கள்,
 ஸ்கந்தவரோதய கல்லூரி ஆசிரியர்கள், ஸ்கந்தவரோதய ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து பிரமுகர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இறுதியாக திரு. சிவஞானம் அவர்களின் நன்றியுரை இடம்பெற்று பாடசாலை கீதத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

Related posts

பாடசாலை சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானம்

wpengine

ஆளுநர் பதவிக்கு தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை

wpengine

தமது அடையாளத்துடன், சமத்துவமாக வாழும் சூழலை ஏற்படுத்த சகலரும் முன்வரவேண்டும். றிசாட் எம் . பி .

Maash