பிரதான செய்திகள்

ஸாகிர் நாயக்கை மக்காவில் சந்தித்து கலந்துரையாடிய ஹிஸ்புல்லாஹ் 

(ஆர்.ஹஸன்)

புனித உம்ரா கடமைகளுக்காக மக்கா சென்றுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அங்கு பல்வேறுபட்ட உயர் மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளார். அதில் ஒரு அங்கமாக சர்வதேச புகழ் பெற்ற இஸ்லாமிய மத போதகரும், ஐ.ஆர்.எவ். அமைப்பின் தலைவருமான டாக்டர். ஸாகிர் நாயக்கை சந்தித்து பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

புனித மக்கா ஹரம் -ரீபில்  இடம்பெற்ற இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேன் பிரதித் தலைவர் அல்ஹாஜ் பௌசுல் ஜிப்ரி, மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் போது, இலங்கை முஸ்லிம்கள் சம காலத்தில் எதிர்நோக்கியுள்ள சவால்கள், பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கான தீர்வுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டன. 
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் தனது முழுமையான பங்களிப்புக்களை வழங்குவதாக இதன் போது டாக்டர். ஸாகிர் நாயக் உறுதியளித்தார். 

Related posts

முசம்மில் மீது மரிக்கார் குற்றச்சாட்டு! குப்பைகள் அகற்றவில்லை

wpengine

ஆறுமுகம் தொண்டமானின் மருமகன் ஊழல் மோசடியில் கைது

wpengine

Multi Knowledge இனது புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

wpengine