பிரதான செய்திகள்

ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்த பெண் ஒருவர் கர்ப்பமடைந்துள்ளார்.

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் மொஹமட் சிஹாப்தீன் ஷாபி நான்காயிரம் சிங்கள பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சைகளை செய்துள்ளதாக கூறி கடந்த காலங்களில் இனவாத நாடகத்தை அரங்கேற்றிய பேராசிரியர் சன்ன ஜயசுமண, அத்துரலியே ரதன தேரர் ஆகியோர் தற்போது அமைதியாக இருந்து வருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ராஜபக்சவினரின் அச்சுறுத்தல் மற்றும் கண்டிப்புகள் காரணமாக சஹ்ரான் மற்றும் ஷாபி போன்றோர் பற்றி பேசாமல் அமைதியாக இருப்பதாக சன்ன ஜயசுமண தெரிவித்திருந்தார்.

சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள, முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை பரப்பிய ராஜபக்சவினர் மற்றும் அவர்களின் முகாமைச் சேர்ந்த ஜயசுமண மற்றும் ரதன தேரர் போன்றவர்கள் சுயவிருப்பில் அல்லது ராஜபக்சவினரின் அச்சுறுத்தல் காரணமாகவோ அமைதியாக இருந்து வருகின்றனர்.

சன்ன ஜயசுமண, பொதுஜன பெரமுன மற்றும் வியத் மக மேடைகளில் முன்வரிசையை பெற்றுக்கொள்ளவும், எப்படியாவது நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காகவும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவர்களால் ஷாபி மற்றும் சஹ்ரான்கள் பற்றி பேச நேரமில்லை.

மருத்துவர் ஷாபி நான்காயிரம் சிங்கள பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்ததுடன், அது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தியது.

மருத்துவர் ஷாபி, கருத்தடை சத்திர சிகிச்சையை செய்துள்ளாரா என்பதை மருத்துவ ரீதியில் உறுதிப்படுத்த அந்த பெண்களை மருத்துவப் பரிசோதனைக்கு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், அந்த பெண்கள் எவரும் பரிசோதனைக்கு வரவில்லை.
இந்த நிலையில் கருத்தடை சத்திர சிகிச்சைக்கு உள்ளடக்கப்பட்டதாக முறைப்பாடு செய்த பெண்களில் ஒருவர் கர்ப்பமடைந்துள்ளார். இந்த பெண் மருத்துவப் பரிசோதனை மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது சம்பந்தமான பரிசோதனை அறிக்கைகளின் பிரதிகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் சன்ன ஜயசுமண மற்றும் ரதன தேரர் ஆகியோர் இந்த பெண்கள் கருத்தடை சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரென அடித்து கூறி வந்ததுடன், அதனை உறுதிப்படுத்த மருத்துவப் பரிசோதனை அவசியமில்லை எனவும் வாதிட்டனர்.

எனினும், கருத்தடை சத்திர சிகிச்சைக்கு உள்ளடக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண் கர்ப்பமடைந்துள்ளதால், உண்மைகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
இதனால், ஜயசுமண மற்றும் ரதன தேரர் ஆகியோர் கூறியது போல் அந்த பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் அவசியமில்லை. இந்த பெண்கள் மூலமே கருத்தடை சத்திர சிகிச்சை என்ற கதை பச்சை பொய் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜயசுமண மற்றும் ரதன தேரர் உள்ளிட்டோர் இந்த இனவாத நாடகத்தை எதற்காக அரங்கேற்றினர் என்பது தொடர்பான விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கடமை நேரத்தில் அரச பணியாளர்கள் முகநூல் பயன்படுத்தக் கூடாது

wpengine

தியாகங்கள் மூலமே வெற்றிகள் கிட்டும்! அமைச்சர் றிசாத்

wpengine

வடக்கு, கிழக்கு இணைப்பு முஸ்லிம்களுக்கு பாதிப்பு! கட்சி அனுமதிக்காது

wpengine