அரசியல்

ஶ்ரீல்ஙகா பொதுஜன பெரமுனவின் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக விலகிய பசில் .

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது ஶ்ரீல்ஙகா பொதுஜன பெரமுனவின்  அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சாணக தெரிவித்துள்ளார்.

இதனால், கட்சியின் ஒழுங்கமைப்பு செயல்பாடுகளை, தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தலைமையில் தற்பொழுது முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஒழுங்கமைப்பு செயல்பாடுகளில் பசில் ராஜபக்ச ஈடுபடமாட்டார் அவர் தெரிவித்தார்.

பிரபல சிங்கள தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது பசில் ராஜபக்ச அமெரிக்காவில் தங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg

Related posts

பிழையான பாதையில் சென்ற நாட்டினை சரியான பாதையில் முன்னோக்கி செல்ல முடிந்துள்ளது.

Maash

slmc தேசியப் பட்டியல் பதவி 5 பிரதேசங்களுக்கு தலா ஒரு வருடம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில்!

Maash

நுவரெலியா பிரதேச சபை, ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வசம்.

Maash