பிரதான செய்திகள்

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு! மன்னார் நோயாளிகள் பாதிப்பு

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
சைட்டம் மருத்துவக்கல்லூரியை மூடக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் மாவட்ட மட்டத்திலான 3 நாள் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை, தலைமன்னார், பேசாலை, முருங்கன் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த மக்கள் பல்வேறு சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ஞானசார தேரர், எந்த அரசியல் சக்திகளுடனும் இணைவதில்லை

wpengine

(PTA) கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யப்பட வேண்டும்” – ரிஷாட் எம்,பி,

Maash

வலுக்கும் வெங்காயச் சண்டை

wpengine