பிரதான செய்திகள்

வேட்புமனு பெற்றுக்கொள்ளும் இறுதி தினத்தை மாற்ற முடியாது மகிந்த

கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவும் நிலைமை ஏற்பட்டால், பொதுத் தேர்தல் நடத்தப்படும் தினத்தை ஒத்திவைக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படுமா என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


கொரோனா இன்னும் நாடு முழுவதும் பரவும் தொற்று நோயாக அறிவிக்கப்படவில்லை என்பதால் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான சட்டத்தின் 24 வது ஷரத்தின் 3வது உப ஷரத்தின் கீழ் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை நடத்த திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் தேர்தலை தேர்தல் ஆணைக்குழுவினால் ஒத்திவைக்க முடியும்.


தேர்தல் நடக்கும் தினத்தை மாத்திரமே ஆணைக்குழுவினால் ஒத்திவைக்க முடியும். வேட்புமனு பெற்றுக்கொள்ளும் இறுதியான தினத்தை மாற்ற முடியாது எனவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஹிலாரி கிளிண்டனுக்கு நிமோனியா காய்ச்சல்! ஆதரவாளர்கள் கவலை

wpengine

தாக்கப்பட்ட மஸ்ஜிதுல் றஹ்மானியா பள்ளிவாசலை பார்வையீட்ட அமைச்சர் றிஷாட்

wpengine

புத்தாண்டிலிருந்து புதிய இடத்தில் ஜனாதிபதி நிதியம் – SriLakan President Anurakumara DIssanayaka

Editor