அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததன் பின்னரே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்.

வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னரே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

அம்பாறை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம், 14 நாட்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு ஒதுக்கப்படும். 

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த பின்னர் 17 ஆம் நாள் நண்பகல் 12 மணிவரை மூன்றரை நாட்கள் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்காக ஒதுக்கப்படும். 

இந்தநிலையில், வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததன் பின்னரே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி தலைமையில் “ஜனாதிபதி கல்விப் புலமைப் பரிசில் வேலைத்திட்டம்” ஆரம்பம்!

Editor

பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் நிகழ்வு

wpengine

மொனராகலை ஜும்மா பள்ளிவாசலின் மௌலவிக்கு 3வருடத்தின் பின்பு விடுதலை

wpengine