பிரதான செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் றிஷாட்

மத்துகம, அகலவத்தை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சற்று முன் (27) பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து தேவைகளைக் கேட்டறிந்தார்.

போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையிலுள்ள பலந்தாவ கிராமத்தில் பாதிப்புற்ற மக்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் பத்துரலியவில் வைத்து நிவாரணப் பணியாளர்களிடம் நிதியுதவி வழங்கி வைத்தார். அத்துடன் லக் ஹந்துர விகாராதிபதியிடமும் பாதிக்கப்ட்ட மக்களுக்கான நிதியுதவியை வழங்கினார்.

பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெருமவும் அந்த பிரதேசத்திற்கு வந்து மக்களின் தேவைகளை கவனித்தார்.

Related posts

வடகொரியாவுக்கு எதிராக இலங்கை

wpengine

வவுனியாவில் மோதல்! கடை சேதம்

wpengine

அரசியலுக்காக இனவாதத்தை தூண்டும் விக்னேஸ்வரன்! கைது செய்ய வேண்டும்

wpengine