பிரதான செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு மரைக்காரின் முயற்சியினால் நிதி உதவி

(அஷ்ரப் ஏ.சமத்)
கொலான்னாவ, வெள்ளம்பிட்டிய  பிரதேச செயலாளா் பிரிவில் 36 ஆயிரம் குடும்பங்கள் கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இம் மக்களுக்காக உடன தமது சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும் வீட்டின் ஆரம்ப செலவுகளுக்காக முதற்கட்டமாக 10ஆயிரம் ருபா ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேற்று (18) ஆம் திகதி கொலான்னாவையில் வைத்து  பகிா்ந்தளிக்கப்பட்டன இந் நிகழ்வில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிஙக நிதி  மற்றும்  அமைச்சா் ரவி கருநாயக்கவும் கலந்து கொண்டனா்.

இந் நிகழ்வு பராளுமன்ற உறுப்பிணா் எஸ்.எம் மரிக்காா் தலைமையில் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த மரிக்காா்.

இப்பிரதேசத்தில் வீட்டுரிமையாளா்கள், வாடகை வீட்டில் இருந்தவா்கள், சட்டவிரோத வீடுகளில் வாழ்ந்த சகலருக்கும் அரசாங்கத்தினால் முதற்கட்டமாக 10ஆயிரம் ருபா வழங்கப்படுகின்றது.  இதனை பிரதம மந்திரி ஜனாதிபதி அவா்களின் அனுமதியின் பேரில் ஒவ்வொரு கிராம சேவகள் ஊடாக சேகரிக்கப்பட்ட தகவல் படி 36ஆயிரம் குடும்பங்களுக்கு 10ஆயிரம் ருபா வழங்கப்படும்.

ஏற்கனவே கடந்த 10 நாற்களுக்குள் 800 டொன் குப்பைகள் அகற்றப்பட்டன. ஒவ்வொரு வீட்டுக்கும் 2 டெக்டா் வீதம் அகற்றப்பட்டன.  அத்துடன் எனது நிதியில்  பாடசாலை மாணவா்களுக்கு அப்பியாசப் புத்தகங்கள் சப்பா்த்துக்கள் வழங்கப்பட்டன, மேலும் பாதிக்கப்பட்ட மக்களது சுயதொழில் முயற்சிக்காக உதவித் திட்டம் அடுத்த கட்டம் வழங்கப்படும். அதற்காக நிதி அமைச்சு உரிய நிதிகளை விடுவிக்க பிரதம மந்திரி நடவடிக்கை எடுத்துள்ளாா்.

மீள்குடியேறி வாழ்ந்து வரும் மக்கள் அன்றாடம் தமது செலவினங்களை சமாளிக்க பெரிதும் இன்னல்களை எதிா்நோக்கி வருகின்றன.  சகல உடைமைகளும் வெள்ளத்தினால் எடுத்துச் செல்லப்பட்டு நாசமாகியுள்ளன.   என பா.உ. மரிக்காா் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தாா்.

உரிய பயனானிகளுக்கு காசோலையும் வழங்கி வைக்கபட்டது.

b1691a24-0707-4dea-b0e8-929a50ae6018

db382b1d-c045-4b6e-85c9-0523fb338f13
7fd2e237-efa9-47df-85e9-1fff525d7d11

Related posts

செட்டிக்குளம் மக்கள் காணியினை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்!

wpengine

பொலிகண்டி ஆர்ப்பாட்டத்திற்கு காத்தான்குடி மக்கள் பல ஆதரவு

wpengine

உலக மது ஒழிப்பு தின பிரதான நிகழ்வு, ஜனாதிபதி தலைமையில்

wpengine