பிரதான செய்திகள்

வெளிநாட்டு பட்டதாரிகள் ஜனாதிபதி செயலகத்தில் ஆர்ப்பாட்டம்! நியமனம் வழங்கவும்.

வெளிநாட்டு வெளிவாரி பட்டதாரிகளுக்கும் பாகுபாடுகள் இன்றி அரச நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் பட்டதாரிகளால் இன்று (08)  கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

“நாடளாவிய ரீதியில் 3,744 வெளிநாட்டு வெளிவாரி பட்டதாரிகள் காணப்படுகின்றனர். 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளிநாட்டு வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும் தற்போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படாமல் புறக்கணிப்பதானது மிகவும் வேதனையாகும். 

“எனவே, பல கஷ்டங்களுக்கு மத்தியில் கற்று பல்கலைக்கழக பட்டத்தைப் பெற்ற  எமக்கும் பாரபட்சம் இன்றி அரச நியமனங்களை வழங்க வேண்டும்” என இந்தக் கவனயீர்ப்பில் ஈடுப்ட்ட பட்டதாரிகள் கோரிக்கை முன்வைத்தனர். 

ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டம் நடைபெற்றது.

Related posts

மோசடி வெளிவந்தால் அமைச்சு பதவிக்கு ஆபத்து அமைச்சர் ஹக்கீம்

wpengine

பாடசாலை மாணவர்களுக்கு இனி வருடத்துக்கு 3 தவணைப் பரீட்சைகள் இல்லை – ஒரு தவணையே பரீட்சை!-கல்வி அமைச்சர்-

Editor

தேசியப் பட்டியலுக்கு ஆலாய் பறக்கும் அரசியல் ஜாம்பவான்கள்!

wpengine