செய்திகள்பிரதான செய்திகள்

வீதியில் உறங்கியவர்கள்மீது வாகனத்தை மோதி சாரதி தப்பி ஓட்டம் , இளைஞர் பலி..!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதி தும்பாஞ்சோலை பகுதியில் வீதியில் உறங்கியவர்கள் மீது வாகனம் ஏறியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இளைஞன் மீது வாகனத்தை ஏற்றிய சாரதி வாகனத்துடன் தப்பிச்சென்றுள்ளார்.

மண்டூர் சின்னவத்தையைச் சேர்ந்த செல்வம் சாந்தன் செல்லையா (25 வயது) என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

செங்கலடி பதுளை வீதியிலுள்ள கரடியனாறு தும்பாஞ்சோலை பகுதியிலுள்ள வீதிக்கு அருகிலுள்ள வேளாண்மை காவலுக்காக குறித்த இளைஞன் உட்பட இருவர் கடந்த திங்கட்கிழமை இரவு சென்று வீதி ஓரமாக படுத்து உறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வீதி ஓரத்தில் உறங்கிக்கொண்டிருந்த இளைஞன் படுகாயமடைந்து எழும்ப முடியாத நிலையில் இருப்பது அவதானிக்கப்பட்டு அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் தலையில் வாகனத்தின் டயர் ஏறியதில் அவர் உயிரிழந்தமை பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததையடுத்து இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அதேவேளை குறித்த இளைஞனுக்கு அருகில் உறங்கிய மற்றொருவர் தெய்வாதீனமாக தப்பித்துள்ளதுடன் இவ்வாறு வீதியில் உறங்கியவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை கரடியனாறு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவத்தையும் மாற்றலாம்.

wpengine

மர்ஹூம் பாயிஸின் மறைவு பெரும் இழப்பு – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அனுதாபம்!

wpengine

அரச பணிகளை ஆரம்பிப்பதற்கான விசேட திட்டம்

wpengine