பிரதான செய்திகள்

வீதியில், இறங்கி மக்களை அழைத்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தால் வானத்தில் இருந்து டொலர் கொட்டாது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உரிமையாளர் தானே என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே மீண்டும் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி நேற்று முன்தினம் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்பாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளதுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவனம் செலுத்த வேண்டிய சில விடயங்கள் குறித்தும் நினைவூட்டியுள்ளார்.

“சஜித் பிரேமதாச கொழும்புக்கு மக்களை அழைத்துக்கொண்டு வாரது, நாட்டு மக்களை தூண்டுவதை நிறுத்த வேண்டும். அடுத்தது பிளவுப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைக்க வேண்டும்.

அனைவரும் இணைந்து பணியாற்றவே நான் அந்த கட்சியை வழங்கினேன். எனினும் தற்போது அந்த கட்சி துண்டுகளாக பிளவுப்பட்டுள்ளது. 43வது படைப் பிரிவு என்ற ஒன்றை ஏற்படுத்தி ஒருவர் தனியாக பயணம் செய்கிறார்.

மேலும் சிலர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால், எதிர்க்கட்சித் தலைவர் நகைச்சுவைகளை வழங்காது கட்சியை ஒன்றிணைக்க வேண்டும்.

நாட்டில் பிரச்சினை இருக்கின்றது என்பதை நாடும் உலகமும் அறியும். ஐக்கிய மக்கள் சக்தி வீதியில், இறங்கி மக்களை கொழும்பு அழைத்து வந்தது என்பதற்கா, டொலர்கள் வானத்தில் இருந்து கொட்டாது.

பைத்தியகாரர்களை போல் வீதிகளில் சத்தமிடாது, நாட்டு மக்களுடன் இணைந்து, அரசாங்கத்துடன் கலந்துரையாடி, நாட்டை கட்டியெழுப்ப கூடிய வழிகளை தேட வேண்டும்” எனவும் டயனா கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வில்பத்து விவகாரம்: ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம் ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை

wpengine

Update இர்பான் தொடர்பான பிந்திய தகவல்கள்

wpengine

புத்தளத்தில் குப்பைகளை கொட்டும் திட்டத்தை எதிர்த்து இறுதிவரை போராடுவோம்!

wpengine