உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

வீதி சட்டத்தை மீறிய தந்தை : பொலிஸில் முறைப்பாடு செய்த சிறுவன்

வீதி சட்டத்தை மதிக்காத தந்தை மீது, 6 வயது சிறுவன் பொலிஸாரின் அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறைப்பாடு செய்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் பாஸ்டன் நகரைச் சேர்ந்தவர் மைக்கல் ரிச்சர்ட். இவரது மகன் பெயர் ரோபி ரிச்சர்ட்சன் (வயது 6).

 சம்பவத்தன்று இவர்கள் இருவரும் காரில் வெளியே சென்றனர். இதன் போது வீதி சமிக்ஞை விளக்கில் சிகப்பு வர்ண விளக்கு  எரிந்து கொண்டிருந்துள்ளது.

மைக்கல் காரை நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டார். இதனை பார்த்த சிறுவன் ரோபி போக்குவரத்து விதியை மீறிவிட்டீர்களே என்று கேட்டார். இதற்கு அவர் இது ஒரு சின்ன விடயம் என கூறியுள்ளார்.

வீட்டிற்கு வந்த ரோபி உடனே 911 என்ற அவசர தொலைNசி எண்ணுக்கு அழைப்பை மேற்கொண்டு  தனது தந்தை போக்குவரத்து விதியை மீறியதாக பொலிஸரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கைடயக்கத் தொலைபேசியை தந்தையிடம் கொடுக்குமாறு பொலிஸார்  கூறியுள்ளனர். அப்போது சிறுவன் கைடயக்கத் தொலைபேசியை  தனது தந்தையிடம் கொடுத்துள்ளான்.

இன்போது ஹலோ சொன்னபோது மறுமுனையில் பேசியவர் க்வின்சி பொலிஸ் நிலையத்திலிருந்து  பேசுகிறோம் என்று கூறியதை கேட்டு சிறுவனின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து கை;கல் பொலிஸாரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

6 வயது மாணவனின் துணிச்சலை பாராட்டி அங்குள்ள தொலைகாட்சியில் சிறுவன் செய்த செயலை பொலிஸார் ஒளிபரப்பு செய்துள்ளனர்.

Related posts

அமைச்சர் றிஷாட் பதியுதீனை விமர்சிப்பதற்காவே மேடை தேடும் ஹக்கீம்!

wpengine

காணியை சீனாவுக்கு தாரைவார்க்கட்டும்! அமைச்சர்களுக்கு ஓரு விதமான நோய்

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு

wpengine