பிரதான செய்திகள்

வீட்டின் கேற் வீழ்ந்து 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட கேப்பாபிலவு பகுதியில் வீட்டின் கேற் (இரும்பு படலை) சிறுவன் மீது வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று (14) காலை இடம்பெற்றுள்ளது.

கேப்பாபிலவு பகுதியினை சேர்ந்த 3 வயது நிரம்பிய ஆதவன் லிதுசிகன் என்ற சிறுவன் வீட்டு கேற்றில் விளையாடிக் கொண்டிருந்த வேளை கேற், சிறுவன் மீது வீழ்ந்து சிறுவன் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரோத பரிசோதனைகளின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுவனின் உயிரிழப்பு கேப்பாபிலவு கிராமத்தில் பெரும்சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது சரியான அக்கறை கொண்டு செயற்படவேண்டும் தற்போது வடக்கு மாவட்டங்களில் அதிகளவில் சிறுவர்கள் உயிரிழப்பு சம்பவம் பதிவாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ආගමික සමුළුවකට සහභාගී වීමට ඤාණසාර හිමි මියන්මාරයේ සංචාරයක.. විරාතු හිමිත් හමුවෙයි

wpengine

இன்று வெளியாகும் இன்னுமோர் தீர்ப்பு ,பிரதமர்,அமைச்சரவை

wpengine

கால்நடை உணவை உண்ணும் சிரியா குழந்தைகளின் அவலநிலை

wpengine