பிரதான செய்திகள்

வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பது மிகவும் ஆபத்தானது

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியுடன் வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பது மிகவும் ஆபத்தானது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் கயான் முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் கடந்த (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நாட்களில் பெற்றோல் போன்ற எரிபொருட்களினால் ஏற்படுகின்ற தீச் சம்பவங்கள் காரணகாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டு நாட்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் உயிரிழப்பதாகவும், நாளாந்தம் 4 முதல் 6 வரையான விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வடமாகாண கல்வி அமைச்சராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமனம்

wpengine

நல்லாட்சி அரசின் 21 ஜனாஷாக்களே! ஞானசார தேரர் விடயத்தில் தீர்வு என்ன?

wpengine

ரவி பதவி விலக வேண்டும்! ரஞ்சன் ராமநாயக்க

wpengine