உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

வீடு திரும்பினார் பாப்பரசர் . . !

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாப்பரசர்  பிரான்சிஸ் சிகிச்சை முடிந்து இன்று வத்திக்கான் திரும்பியுள்ளார்.

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்புவதற்கு முன்பு இன்று முதல் முறையாக பொது வெளியில் தோன்றினார். 

88 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கடுமையான சுவாச தொற்று காரணமாக இத்தாலியின் ரோமில் உள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார். 

சுமார் 5 வாரங்களாகச் சிகிச்சை பெற்றுவந்த அவர் ஆபத்தான கட்டத்திலிருந்து விடுபட்டுள்ள நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

Related posts

கட்டாரை அச்சுறுத்தும் அரபு கூட்டணி

wpengine

Ghibli- style Ai image ஆபத்தின் மறுபக்கம் அவதானம் . ..

Maash

சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி

wpengine