பிரதான செய்திகள்

விஷேட விமானம் மூலம் கொழும்பு செல்லும் விஜயகலா

சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.

அதற்கமைய அவர் தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 6.30 மணியளவில் அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் கொழும்பு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் சந்திக்கவுள்ளது.

wpengine

மஹிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினரின் பேஸ்புக் காதல்

wpengine

சிலாவத்துறை கடற்படை முகாம்! போதைப் பொருள் கடத்தலை தடுக்க பிரதமர் தெரிவிப்பு

wpengine