பிரதான செய்திகள்

வில்பத்து பிரச்சினை! ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும்

வில்பத்து பிரச்சினை தொடர்பாக துரித விசாரணையை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார ராஜாங்க அமைச்சர் நிரோஸன் பெரேரா ஜனாதிபதியிடம் கோரி்க்கை விடுத்துள்ளார்.

இதன்படி, அந்த விசாரணை அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் தயாரிக்க வேண்டும் என ஐனாதிபதியிடம் தாம் கோரியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

வில்பத்து வனப்பகுதி புத்தளம் மாவட்டத்திற்கு எல்லையாக இருக்கின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட தலைவர் என்ற வகையில் தாம் ஜனாதிபதியிடம் இந்த விடயத்தை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வில்பத்து வனப்பாதுகாப்பு மற்றும் அதனை சுற்றி அரசுக்கு சொந்தமான பிரதேசம் அழிக்கப்பட்டு பாரிய சூழல் நாச வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசாங்கம் அது பற்றி எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளவில்லை எனவும் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களும் தொடர்ந்தும் குற்றச்சாட்டி வந்தன.

இது அரசாங்கத்தின் நல்லாட்சி அடிப்படை தன்மைக்கு புறம்பாக இருப்பதனால் ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாக விசாரணை நடத்தி அறிக்கையின் மூலமாக நாட்டு மக்களுக்கு அது தொடர்பாக உரிய வகையில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

இந்த அரசாங்கம் எமது சமூகத்துக்கு இழைத்து வரும் அநியாயங்களால் மக்கள் வேதனை

wpengine

பழைய தகவல்களை பேஸ்புக் தரும் புதிய வசதிகள்

wpengine

நச்சுத்தன்மையற்ற நாடு! ரத்தன தேரர் -அமைச்சர் சம்பிக்க ரணவக்க முறுகல்

wpengine