பிரதான செய்திகள்

வில்பத்து பாதுகாப்பு தொடர்பில் மன்னாரில் கலந்துரையாடல்

வில்பத்து தேசிய சரணாலயத்தின் முகாமைத்துவ திட்டமிடல் செயற்பாட்டிற்கான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் விசேட கலந்துரையாடல் அனுராதபுரம் வண ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தில் உள்ள திணைக்கள அதிகாரிகள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,மதத்தலைவர்கள்,பாதுகாப்புத்தரப்பினர் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது இலங்கையில் உள்ள எந்த தேசிய பூங்காவாக இருந்தாலும் அதனை நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அதனை நிர்வகிப்பதற்கான முகாமைத்துவ திட்டமிடல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நிர்வகிப்பதற்காக ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முகாமைத்துவ திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக வில்பத்து தேசிய சரணாலயத்தை பயண்படுத்தும் முறை,வில்பத்து சரணாலயத்தில் உள்ள மிருகங்களினால் அப்பகுதி மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்,வில்பத்து சரணாலயத்தை வருமானம் ஈட்டக்கூடிய வகையில் பயண்படுத்துதல்,உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.625-0-560-320-160-600-053-800-668-160-90

குறித்த கலந்துரையாடலில் வண ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.625-0-560-320-160-600-053-800-668-160-90-2

Related posts

மங்களவின் நினைவு நிகழ்வில் முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine

அதாவுல்லா என்ற கடும்போக்கு முஸ்லிம் இனவாதி நாடாளுமன்ற பிரதிநிதியாக வரக்கூடிய சந்தர்ப்பம்

wpengine

அமெரிக்கா ஜனாதிபதிக்கு எதிராக கையொப்பமிட்டுள்ள அமைச்சர் ஹக்கீம்,ராஜித

wpengine