பிரதான செய்திகள்

வில்பத்து காடழிப்பு தண்டனை வழங்கப்பட வேண்டும்

வில்பத்து பிரச்சினை தொடர்பில் ஒத்திவைப்பு விவாதமொன்றை பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளதாக சபைத்தலைவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் முன்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக மீண்டும் வில்பத்து காடழிப்பு தொடர்பில் பாரியளவில் வாதவிவாதங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில் , இதனுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல்வேறு அமைப்புக்களால் அரசை வலியறுத்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை , கடந்த 2015ம் ஆண்டு தொடக்கம் இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையில் , வில்பத்து வனப்பகுதியில் காடழிப்பு ஏதும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என கடந்த 21ம் திகதி அறிக்கையொன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

Related posts

மரணிக்கும் போது பிறப்பில் இருந்து இறக்கும் தர்வாயில் நுால்

wpengine

மனித நேய செயற்பாட்டாளர் பிளாள் கலீல் ஹாஜியார்.

wpengine

மாகாணசபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களையும் தாமதமின்றி நடத்த வேண்டும்

wpengine