செய்திகள்பிரதான செய்திகள்

விலங்குகள் தொடர்பில் எவ்வாறான கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப் பெற முடியாது .

விலங்குகள் தொடர்பில் எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. எவ்வாறிருப்பினும் எந்தெந்த பிரதேசங்களில் எந்த விலங்குகள் அதிகளவில் வாழ்கின்றன என்பது குறித்த அணுமானத்தை எட்டலாம். இது விலங்குகள் முகாமைத்துவத்துக்கு உதவும் என வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் (பாதுகாக்கப்பட்ட வன முகாமைத்துவம்) மஞ்சுள அமரரத்ன தெரிவித்தார்.

14ஆம் திகதி வெள்ளிக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

விவசாய திணைக்களத்தின் தலைமையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வனஜீவராசிகள் திணைக்களமும் அதற்கு ஒத்துழைப்பினை வழங்குகிறது. எனினும் இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த கணக்கெடுப்பின் ஊடாக விலங்குகள் தொடர்பான பல்வேறு தரவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

சரியான எண்ணிக்கையைப் பெற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், எந்தெந்த விலங்குகள் எந்தப் பிரதேசங்களில் அதிகளவில் காணப்படுகின்றன என்பது உள்ளிட்ட சில அணுமானங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். எவ்வகையில் கணக்கெடுப்புக்களை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப் பெறுவது கடினமாகும். இந்த கணக்கெடுப்பில் பெற்றுக் கொள்ளப்படும் தரவுகளுக்கமைய விலங்குகள் முகாமைத்துவ வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலகுவாக அமையும் என்றார்.

இன்று சனிக்கிழமை பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளின் கணக்கெடுப்பை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை விவசாய திணைக்களம் முன்னெடுத்துள்ளது. இதற்காக விவசாயிகளிடம் படிவமொன்றும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய காலை 8 மணி முதல் 8.05 வரை இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அதற்கமைய 5 நிமிடத்தில் வீட்டுத்தோட்டம் அல்லது பயிர் நிலத்தில் அவதானித்த விலங்கள் தொடர்பில் அந்த படிவத்தில் குறிப்பிடப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் செங்குரங்கு, குரங்கு, மர அணில் மற்றும் மயில் என்பவை உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த விலங்குகள் அவதானிக்கப்பட்டால் அந்த எண்ணிக்கையை குறித்த படிவத்தில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இதுவரையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை! இன்று கூட்டம்

wpengine

சமூகவலைத்தள எந்தவொரு கண்காணிப்பும், பதிவு செய்தலும் இடம்பெறுவதில்லை

wpengine

பஷில் ராஜபக்ஷ மீண்டும் விடுதலை

wpengine