செய்திகள்பிரதான செய்திகள்

விலங்குகளை கணக்கெடுப்பதால் விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்காது, அரசாங்கம் பிரச்சினைகளை மறைக்க முயல்கின்றது .

பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விலங்குகள் தொடர்பில் கணக்கெடுப்புகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாய அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினராலும் இவ்வாறு குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. 

இந்த விலங்குகள் கணக்கெடுப்பானது விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் மூலம் தமது பிரச்சினைகளை அரசாங்கம் மறைக்க முயல்வதாக விவசாய அமைப்புகள் குற்றஞ்சுமத்தியுள்ளன. 

குரங்கு, மர அணில், மயில் மற்றும் பூச்சியினங்களால் பயிர்களுக்கு தீங்குகள் விளைவிக்கப்படுகின்றன. எதிர்வரும் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இந்த விலங்குகள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படும். 

இதன்படி, அன்று காலை 8 மணிமுதல் 8.05 ற்குள் இது தொடர்பான கணக்கெடுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவற்றை கட்டுப்படுத்தும் வகையில் அவற்றின் கணக்கெடுப்புகளை உரிய கிராம உத்தியோகத்தர்களிடம் சமர்ப்பிக்குமாறு விவசாயம் மற்றும் கால்நடை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடல் மணல் தொடர்பில் கவனம் செலுத்தும் ஜனாதிபதி

wpengine

அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் நேரடியாக பிரதமர் பதவியை ஏற்கவுள்ளார்.

wpengine

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள்! 20 பயனாளர்கள் இன்று தமிழ்நாட்டிற்கு.

Maash