பிரதான செய்திகள்

விரைவில் முன்னால் அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவி கிடைக்கும் வாய்ப்பு

மாத கணக்கில் தாமதமாகி வந்த நிலையில், நான்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் அடுத்த வாரம் நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியமிக்கப்பட உள்ள நான்கு ஆளுநர்களில் மூன்று பேர் முன்னாள் அமைச்சர்கள் எனவும் ஒருவர் முன்னாள் ஆளுநர் எனவும் கூறப்படுகிறது.

9 மாகாணங்களில் ஏனைய 5 மாகாண ஆளுநர் பதவிகளில் எந்த மாற்றங்களையும் செய்வதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் ஏனைய நான்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்பட உள்ள புதிய ஆளுநர்களின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.   

Related posts

மீராவோடை வெளிநோயாளர் பிரிவை திறந்து வைத்த ஹாபீஸ் நசீர் (படங்கள்)

wpengine

20 ஆம் திகதி மஹிந்தவை சந்திக்கவுள்ள 16பேர்

wpengine

சஜித் – ரணில் கொழும்பில் இணைவு! மேயர் வேட்பாளராக எரான் விக்ரமரத்ன முன்மொழிவு .

Maash