உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

விருந்தில் பங்கேற்பு 30 மாணவர்களுக்கு 99 சாட்டை அடி ஈரானில்

ஒரு விருந்தில் பங்கேற்ற 30க்கும் மேற்பட்ட ஈரான் மாணவர்கள் அறநெறி பாதுகாப்பு போலீசாரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் ஒவ்வொருவருக்கும் 99 சாட்டையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளன.

அதிக எண்ணிக்கையிலான மாணவர்களும், மாணவிகளும் மது அருந்தியிருந்தார்கள். அவர்கள் அநாகரீகமான நடத்தையில் ஈடுப்பட்டிருந்தனர் என்று காஸாவின் நகரை சேர்ந்த அரச வழங்கறிஞர் கூறியதாக மேற்கோள்காட்டப்படுகிறார்.

மது குடிப்பதும், ஆண்-பெண் இணைந்து நடனமாடுவதும் இஸ்லாமிய குடியரசான ஈரானில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பிடிபடுவோர் தண்டிக்கப்படுவது பொதுவானதே என்றாலும் ஒரு வழக்கில் 30 பேர் தண்டிக்கப்படுவது வழக்கத்திற்கு சற்றுமாறானது.

Related posts

காலாவாதியான அரசியலமைப்பை இரத்துச் செய்து, பொதுஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு . !

Maash

இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் எமது கட்சியில் இல்லை நாம் தூய்மையான அரசியலே செய்கின்றோம்!-எதிர்க்கட்சித் தலைவர்-

Editor

தாருஸ் ஸலாம் மற்றும் கட்சியின் சொத்துக்கள் தொடர்பாக ஹக்கீம் வெளியிட வேண்டும்- பசீர்

wpengine