பிரதான செய்திகள்

வியாழந்திரன்,பிள்ளையான் குழுக்களுக்கிடையில் மோதல்

மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இச்சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனையவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த செவ்வாய்கிழமை சந்திவெளியில் பிரதேசசபையில் போட்டியிட்ட பிள்ளையான் குழுவை சேர்ந்த ஒருவரை வியாழேந்திரன் குழு வாள்களால் வெட்டியிட்டியுள்ளனர்.


இவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நேற்றைய தினம் பிள்ளையான் குழு, வியாழேந்திரன் குழு மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முஸ்லிம் ஹோட்டல் மீது தாக்குதல் ; விசாரணையில் வெளியானது அதிர்ச்சித் தகவல்

wpengine

ஹிஜாப் அணியாத பெண்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க ஈரான் அரசு தீர்மானம்!

Editor

ஊரார் வீட்டுக்கோழியறுத்து (உ)றவினர் பேரில் கத்தம் ஓதாதீர்! பிரதியமைச்சர் ஹரீஸுக்கு அக்கரைப்பற்று முகா போராளியின் பகிரங்க மடல்

wpengine