உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

விமான பயணத்தில் இந்தியாவில் “செல்பிக்கு“ வரயிருக்கும் தடை

விமான பயணத்தின் போது, பயணிகளும், விமானப் பணியாளர்களும் விமானத்துக்குள் செல்பி எடுத்துக் கொள்ள தடை விதிக்க இந்தியாவின் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

விமான சேவையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கையை எடுக்க மத்திய் அமைச்சம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, விமான நிறுவனங்கள், தங்களது பணியாளர்களுக்கு விமானம் பறந்து கொண்டிருக்கும் போது செல்பி எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

விமானிகளும், விமானப் பணியாளர்களும் சேர்ந்து விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்த போது செல்பி எடுத்துக் கொண்டது, சமூக தளங்களில் பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Related posts

மர்ஹூம் பாயிஸின் மறைவு பெரும் இழப்பு – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அனுதாபம்!

wpengine

எதிர்வரும் 5ஆம் திகதி அரச ஊழியர்களுக்கு சந்தோஷமான செய்தி

wpengine

வவுனியா வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்கும் வட மாகாண சபை

wpengine