பிரதான செய்திகள்

விமல், கம்மன்பில அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவுடன் தொடர்பு

அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவுடன் இணைந்து ஸ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகளை பொது எதிர்க்கட்சி எனக் கூறிக்கொள்வோர் முன்னெடுத்து வருகின்றனர் எனக் குற்றம் சாட்டிய நவ சிஹல உறுமயத் தலைவர் சரத் மனமேந்திரா, விமல்வீரவன்ச, கம்மன்பில ஆகியோர் முடிந்தால் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடாமல் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்று காட்ட வேண்டும் என்றும் சவால் விடுத்தார். 

விமல் வீரவன்ச எழுதிய புத்தகமொன்றில் டலஸ் அழகப்பெரும அமெரிக்காவின் உளவுப் பிரிவான சீ.ஐ.ஏ.யின் உளவாளி எனக் குறிப்பிட்டிருந்தார். இன்று அந்த சீ.ஐ.ஏ உளவாளியுடன் இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

கம்பன்பில யாரென்று மக்களுக்கே தெரியாது. கம்பன்பிலவும், விமல்வீரவன்சவும் மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படைத்தை பயன்படுத்தியே தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். அவர்களால் தமது சொந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டால்தான் அவர்களுக்கு தேர்தல்களில் வெற்றிபெற முடியும்.

எனவே நான் அவர்கள் இருவருக்கும் சவால் விடுக்கிறேன் முடிந்தால் தேர்தல்களில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடாமல் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுக்காட்டுமாறு சவால் விடுக்கிறேன்.

Related posts

ஈரான் சந்திப்பில் ஜனாதிபதியுடன் அமைச்சர் றிஷாட், ஹக்கீம் மற்றும் மஸ்தான்

wpengine

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையினால் ஏற்றுமதி வருமானத்துடன் வெளிநாட்டு நேரடி முதலீட்டு அமைச்சர் றிஷாட்

wpengine

ராஜபக்ஷக்களின் எழுச்சியில் ஏக தலைமைகளின் அந்தஸ்து!

wpengine