பிரதான செய்திகள்

 “வித்தியாலயம்” ஆய்வுச் சஞ்சிகை வெளியீட்டு விழா, எதிர்வரும் சனிக்கிழமை

புத்தளம் கல்வி வலய முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்  இஸட்.ஏ. சன்ஹிர் அவர்களை இதழாசிரியராகக்​ கொண்ட “வித்தியாலயம்” ஆய்வுச் சஞ்சிகை வெளியீட்டு விழா, எதிர்வரும் சனிக்கிழமை (26/10/2019), காலை 9.00 மணிக்கு புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

காலை 9.00 மணி முதல் 10.00 மணிவரை இடம்பெறவுள்ள முதலாவது அமர்வில் வரவேற்புரை, தலைமையுரை , வாழ்த்துரை, வித்தியாலயத்தின் மறுபக்கம் ஆகிய நிகழ்வுகளும் காலை 10.30 முதல் பி.ப 1.30 மணி வரை இடம்பெறவுள்ள இரண்டாவது அமர்வில்  புத்தளத்தில் கல்வி – அன்று,    புத்தளத்தில் கல்வி – இன்று, புத்தளத்தில் கல்வி அபிவிருத்தி, எமது வித்தியாலயங்கள், நுழைவாயில் – பழமையும் புதுமையும் என்ற தலைப்புகளில் ஆய்வுரைகள் இடம்பெறுவதுடன் இதழாசிரியர் இதயத்திலிருந்து, பிரதம அதிதி உரை ஆகியனவும் இடம்பெறும்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி U.M.B. ஜெயந்திலா,  விசேட அதிதியாக ஓய்வுபெற்ற மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு J.G.N. திலகரட்ன மற்றும் சிறப்பு அதிதியாக புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு W.P.S.K. விஜேசிங்ஹ  ஆகியோர் கலந்து சிறப்பிப்பதுடன் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், புத்திஜீவிகள் என பலரும் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹஸீப் மரிக்கார் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

wpengine

“என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், 15 இலட்சம் ரூபா வரை பிணை இன்றி இலகுகடன் வசதி!!!

wpengine

இஸ்லாமிய பெண்களுக்கு ஏனையோர் போன்று சம உரிமை வேண்டும்-WAN

wpengine