பிரதான செய்திகள்

விடுதலைப் புலிகளின் ஆரம்ப கட்டம் போன்று இன்று வடக்கில்

விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலத்தைப் போன்று வடக்கில் தற்போது அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆரம்பம் முதல் எச்சரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ். கொக்குவில் பகுதியில் நேற்று முன்தினம் இரு பொலிஸ் அதிகாரிகள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கேள்வியெழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்து பேசிய அவர்,

“விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலத்தைப் போன்று வடக்கில் தற்போது அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருகின்றன. இது பயங்கரவாதத்தின் ஆரம்பமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

அண்மையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்து நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமும் இதனையே எடுத்து காட்டுகின்றன.

இந்நிலையில், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆரம்பம் முதல் எச்சரிக்கை விடுத்து வருவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

207 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக தகவல்

wpengine

மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் பிணையில்.

Maash

கடும் வறட்சிக்கு மத்தியில் நோய் நிலைமைகள் அதிகரிக்கும் அபாயம்!

Editor