பிரதான செய்திகள்

விக்ரமசிங்க ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் – நாமல் ராஜபக்ஷ

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இந்த நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் ஊடகத்தையும் எதிர்க்கட்சியையும் மிகவும் அச்சுறுத்துகின்றது என்று அவர் கூறியுள்ளார்.

நாட்டை அபிவிருத்தி செய்யும் எந்தவொரு வேலைத் திட்டங்களும் தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை என்றும் அவர் கூறுகின்றார்.

தற்போதைய அரசாங்கம், கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை உலகிற்கு காட்டிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

அத்துடன் எந்த எதிர்ப்பு வந்தாலும் நடை பவணியை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதாக அவர் மேலும் கூறினார்.

மாத்தறை பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

Related posts

இரத்தினபுரி மக்களின் இயல்பு வாழ்வைத் துரிதப்படுத்த அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

காணி கிடைக்கும் வரை முள்ளிக்குளம் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்-சுரேஸ் பிரேமச்சந்திரன்

wpengine

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது குறித்து அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும்

wpengine