பிரதான செய்திகள்

விக்னேஸ்வரனின் நோக்கத்திற்கு நாங்கள் தலைசாய்க்க முடியாது- ஹிஸ்புல்லாஹ்

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தனது என்னத்தில் தோன்றும் விடயங்களை அறிக்கையாக மாகாணசபையில் சமர்பித்து நிறைவேற்றுவதாகவும் இதற்கு நாங்கள் தலை சாய்க்க தேவையில்லை எனவும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வடக்கினையும் கிழக்கினையும் ஒன்றிணைக்கின்றார். இதற்கு நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

நாங்கள் தனித்தே செயற்படுவோம். குறித்த மாகாணத்திற்கு பொறுப்பானவர்கள்தான் அந்த மாகாணத்திற்கு உரிய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

இப்போது அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள்.

மக்களின் அபிலாசைகளை எப்போதும் வெல்ல முடியாது. இதனால் நாம் எப்போதும் தனித்துதான் செயற்படுவோம் என்றும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அபாண்டங்களையும், வீண்பழிகளையும் பரப்பினாலும் சமூக பயணத்தை நிறுத்தபோவதில்லை அமைச்சர் றிஷாட்

wpengine

“உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்“ திசை திருப்பும் யுக்தி பாதாள உலகக் குழுக்கள் மூலம் முன்னெடுப்பு .!

Maash

உயர்வடைந்துள்ள மரக்கறிகளின் விலைகள்

wpengine