பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

விக்னேஸ்வரனின் கட்சியின் வன்னி தொகுதிக்கான முதன்மை வேட்பாளர்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னித் தேர்தல் மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளாராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் போட்டியிடுகின்றது.


இந்நிலையில் அந்தக் கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் முதன்மை வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.


இவர் கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக வன்னியில் தெரிவாகி செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எம்.ஐ.எம்.முஸ்தபாவின் மறைவுக்கு நிஸாம் காரியப்பர் அனுதாபம்

wpengine

தமிழ் தலைமைகளின் அரசியலமைப்பு தவிப்புக்கள்

wpengine

ரஷ்யாவுக்கு ஆதரவாக 16000 ஆயிரம் சிரியா படை உக்ரேனில்

wpengine