பிரதான செய்திகள்

விக்னேஸ்வரனினால் வவுனியாவில் பதற்றம்

வவுனியா இ.போ.ச பஸ் நிலையத்தில் இருந்து வவுனியா தனியார் பஸ்கள் உள்ளூர் சேவைகளை முன்னெடுக்க சென்ற போது இ.போ.சபையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வுனியாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து இரண்டு பஸ் சேவைகளும் சேவையில் ஈடுபடுமாறு முதலமைச்சரினால் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இதனை நடைமுறைப்படுத்துவதில் இ.போ.சபை தரப்பால் சில பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நத்தார் மற்றும் பண்டிகைக்காலம் என்பதால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து முழுமையான சேவையை மேற்கொள்வதனை இரண்டு வாரங்களுக்கு பிற்போடுவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

Related posts

அஸ்ஹர் பல்கலைக் கழகம் புலமைப்பரிசில்

wpengine

கஞ்சிபான இம்ரானிடம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

wpengine

சிலாபம் நகரில் பதற்றம் ! ஊரடங்கு சட்டம்

wpengine