பிரதான செய்திகள்

விக்கினேஸ்வரன் தொடர்ந்து குழப்பமான செயற்பாட்டில் ஈடுபடுகின்றார் – தினேஷ் குணவர்த்தன

வடக்கு முதல்வர் சீ.வி. விக்கினேஸ்வரன் தொடர்ந்து குழப்பமான செயற்பாட்டில் ஈடுபடுவாரானால் வரதராஜப் பெருமாளுக்கு நடந்ததே நடக்கும் என பொது எதிரணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

அண்மையில் வடக்கு மாகாணசபை தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தமை தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் தினேஷ் குணவர்த்தன எம்.பி. மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் வட, கிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் போன்று செயற்படவேண்டாமென சீ.வி. விக்கினேஸ்வரனுக்கு நாம் கூறுகின்றோம்.

வடமாகாணசபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி செய்கின்றது என்பதை மறந்து முதலமைச்சர் சீ. வி. விக்கினேஸ்வரன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.

வரதராஜப்பெருமாளுக்கும் வடக்கு, கிழக்கு மாகாணசபைக்கும் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை சீ.வி. விக்கினேஸ்வரன் ஞாபகத்தில் வைத்துக்கொள்வது சிறந்ததாகும்

குறிப்பாக அண்மையில் அவர் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்த வரைபு ஒன்றை வெளியிட்டிருந்தார். வட மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆட்சி செய்து வருகின்றது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவராக சம்மந்தன் இருக்கின்றபோது வடக்கு முதல்வர் சீ.வி. விக்கினேஸ்வரன் எவ்வாறு தீர்வுத்திட்டங்களை முன்வைக்க முடியும்?

அந்தவகையில் வட மாகாண சபை முதலமைச்சர் ஏன் இவ்வாறு செயற்படுகின்றார் என்று புரியவில்லை.

வரதராஜபபெருமாளின் அறிவிப்புக்கள் விடயத்தில் அன்று ஜனாதிபதியாக இருந்தவர் வடக்கு கிழக்கு மாகாண சபையை என்ன செய்தார் என்பதனை அனைவரும் நினைத்துப்பார்க்க வேண்டும். கடந்தகாலத்தில் இனவாதிகள் மேற்கொண்ட செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர 30 வருடங்கள் தேவைப்பட்டன. எனவே இதற்கு பின்னரும் இவ்வாறு செயற்படுவதற்கு யாருக்கும் இடமளிக்க முடியாது.

இதேவேளை அரசாங்கம் எவ்வாறான தீர்வுத்திட்டத்தை முன்வைக்கப்போகின்றது என்று புரியவில்லை. அதிகாரப் பகிர்வு குறித்தும் பேசப்படுகின்றது. ஒற்றையாட்சியில் மாற்றம் ஏற்படக்கூடாது என்பதனை நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சில மாதங்களில் அவசர மருந்து கொள்வனவை நிறுத்த நடவடிக்கை!

Editor

இந்த இழப்பை எவ்வாறு சீர் செய்யப் போகின்றோம்? அமைச்சர் றிசாத்திடம் தெரிவிப்பு

wpengine

அமைச்சர் றிஷாட்டின் முன்மாதிரியை பின்பற்றினால் நிர்வாகப்பணிகள் இலகுவாகும்-வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர்

wpengine