பிரதான செய்திகள்

வாழைச்சேனையில் போதைவஷ்தை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

(அனா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிகரித்து காணப்படும் போதைவஷ்து பாவனையை கட்டுப்படுத்தக் கோறி வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை மக்கள் நேற்று (19.08.2016) ஜூம்ஆ தொழுகையின் பின்னர் அமைதியான ஊர்வலம் ஒன்றினை மேற்கொண்டனர்.

பிறைந்துரைச்சேனை நூரியா ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் கே.பதுர்தீன் தலைமையில் இடம் பெற்ற இவ் அமைதி ஊர்வலம் பிறைந்துரைச்சேனை நூரியா ஜூம்ஆ பள்ளிவாயலில் இருந்து ஆரம்பமாகி பன்சல வீதி, மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியூடாக வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தை சென்றடைந்தது.unnamed (3)

அமைதி ஊர்வலத்தின் இறுதியில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் குறைவடைந்து காணப்பட்ட போதைவஸ்து பாவனை தற்போது அதிகரித்து காணப்படுவதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸில் தனிப்பிரிவென்றை அமைக்குமாரும் கோறி வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர விதாககேயிடம் பள்ளிவாயல் தலைவர் கே.பதுர்தீன் மகஜர் ஒன்றினை கையளித்தார் இதில் பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.unnamed (1)

unnamed (4)

Related posts

பொஸ்னியாவில் முஸ்லிம்களைக் கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை!

wpengine

இந்தியாவில் Cryptocurrency தடை செய்யப்படுமா? அல்லது அங்கீகரிக்கப்படுமா? நிதியமைச்சர்

wpengine

மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்

wpengine