பிரதான செய்திகள்

வாழைச்சேனையில் பாதுகாப்பற்ற கடவை! முச்சக்கரவண்டி விபத்து

(அனா)
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு (17.09.2017) சென்ற இரவு நேர கடுகதி புகையிரதத்தில் வாழைச்சேனை மஜ்மா நகர் 193 மைல் கல் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கர வண்டி சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கும் புணாணை புகையிரத நிலையத்திற்கும் இடைப்பட்ட மஜ்மா நகர் பாதுகாப்பற்ற புகையிரத கடவையால் வாழைச்சேனையில் இருந்து மஜ்மா நகர் கிராமத்திற்கு சென்ற முச்சக்கர வண்டி புகையிரதத்தில் இரவு 9.15 மணியளவில் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் சென்ற சாரதியுடன் நால்வர் எதுவித காயங்களும் இன்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன், முச்சக்கர வண்டி நீண்ட தூரம் தூக்கி எறியப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அதாவுல்லாவின் மீள்வருகை! மு.கா வின் ஏகபோக அரசியல் கனவில் இடி

wpengine

அமைச்சர் பௌசிக்கு எதிராக வழக்கு! வாகனம் தொடர்பாக

wpengine

விவசாயிகள் ஆர்பாட்டம்! விவசாய அமைச்சரின் வீடு சுற்றிவளைப்பு

wpengine