பிரதான செய்திகள்

வாழைச்சேனை அல் ஹக் விளையாட்டுக் கழகத்தின் இப்தார்

(அனா)
வாழைச்சேனை அல் ஹக் விளையாட்டுக் கழகத்தின் இப்தார் நிகழ்வு ஹைராத் வீதியில் அமைந்துள்ள கழக அலுவலகத்தில் இன்று 11 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விளையாட்டுக்கழக தலைவர் யூ.எல்.எம்.காலிதீன் தலைமையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா தொகுதி அமைப்பாளர் எச்.எம்.றியாழ் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்.

இங்கு ஏறாவூர் மஸ்ஜிதுல் நூறுல் சலாம் பள்ளிவாயல் பேஸ் இமாம் அஷ்ஷேஹ் ஐ.எம்.றியாஸ் (பயாலி) விசேட பயான் நிகழ்த்தினார்.

Related posts

வவுனியாவில் ஆக்கிரமித்த காணிகளை பெற்றுக்கொண்ட கமநல திணைக்களம்

wpengine

கல்விக்காக அதிக நேரம் செலவழித்த அரசியல்வாதி என்றால் நான் தான்

wpengine

Northern Politicos Not Happy

wpengine