பிரதான செய்திகள்

வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரதேச சபை உறுப்பினர் இம்தியாஸ்

எம்.ரீ. ஹைதர் அலி
கோறளைப்பற்று பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் SIM. இம்தியாஸ் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது நான் வெற்றி பெற்றால் தனது மாதாந்த சம்பளத்தை அந் நூர் தேசிய பாடசாலையின் உயர் தர விஞ்ஞான பிரிவுக்கு வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அவ்வாக்குறுதியை நிறைவேற்றினார்.

நேற்று (11) பாடசாலையில் நடைபெற்ற காலை ஆராதனை நிகழ்வின் போது பாடசாலைக்கு சமூகமளித்த பிரதேச சபை உறுப்பினர் தனக்கு கிடைத்த முதலாவது மாதாந்த சம்பளத்தினை பாடசாலை அதிபர் AMM தாஹிர் அவர்களிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோது தனது உரையில் அவர்

தான் இந்த பாடசாலையின் பழைய மாணவன் என்றும் என்னால் இப்பாடசாலைக்கு இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்திலும் தொடந்தேர்ச்சியாக எனது மாதாந்த சம்பளம் இப்பாடசாலையின் உயர் தர விஞ்ஞான பிரிவுக்கு வழங்கப்படும்.

அத்துடன், இதுக்கு மேலதிகமாக என்னால் முடியுமான வரை பாடசாலை நலனில் அக்கறை செலுத்தி அதன் அபிவிருத்திக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் தனது உரையில் தான் தேர்தல் பிரசாரத்தின்போது நான் வெற்றி பெற்றால் எனது மாதாந்த சம்பளத்தை அந் நூர் தேசிய பாடசாலையின் உயர் தர விஞ்ஞான பிரிவுக்கு வழங்குவேன் என்று சொன்னபோது எனக்கு சிலர் விமர்சனங்களை மேற்கொண்டார்கள்.

முதலில் உங்கள் கடனை கொடுங்கள் அதன்பிறகு பாடசாலைக்கு கொடுக்கலாம் என்று இதுவும் எனது கடன்தான் ‘எனது பாடசாலைக்கு நான் கொடுக்க வேண்டிய கடன்’ என்பதை விமர்சனம் செய்தவர்களுக்கு இத்தருனத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், பிரதி அதிபர், உப அதிபர், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Related posts

அக்கரைப்பற்றில் புறக்கணிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள்.

wpengine

ஈ.பி.டி.பிக்கும் அங்கஜனுக்கும் இடையில் மோதல்! பலர் புறக்கணிப்பு

wpengine

அமைச்சர் றிஷாட்,சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பொதுபலசேனா முறைபாடு

wpengine