பிரதான செய்திகள்

வாக்குரிமையை பயன்படுத்துவதை தொழிற்சங்கங்கள் தடுக்கக் கூடாது

மக்கள் சுதந்திரமாக தமது வாக்குரிமையை பயன்படுத்துவதை தொழிற்சங்கங்கள் தடுக்கக் கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் நேற்றைய  தினம் பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒரு உரிமையாக இருந்தாலும், தேர்தல் காலத்தில் இத்தகைய நடவடிக்கைகள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதுவித பிரச்சினைகளும் இன்றி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

முசலி பிரதேச செயலாளர் விபத்து! மன்னார் வைத்தியசாலையில் அனுமதி

wpengine

வாழைச்சேனையில் பாதுகாப்பற்ற கடவை! முச்சக்கரவண்டி விபத்து

wpengine

அரசாங்கத்திற்கு எதிராக மிகப்பெரிய பௌத்த பிக்கு குழுவினர்

wpengine