பிரதான செய்திகள்

வாக்குத் தவறாத நாக்கு

எலும்பில்லா சதைப்பிண்டம்

காற்றை சுழற்றி

வார்த்தையை வடிவாக்கி

உளமெண்ணியதை கதைத்திடும்

 

காற்றில் கரைந்த வார்த்தை

கண்ணியம் காத்திடினில் கனிவாய்

காலம் முழுதும் காதிலொலிக்கும்

 

நிம்மதி வாழ்க்கைக்கு

நித்தவும் நிதானமாய் பேசிடு

வாக்குத் தவறிடினில் வாழ்வழிந்திடும்

 

நம்பிக்கையோ வாழ்க்கை

நாணயமான வாக்கே வாழ்வினச்சாணி

வாக்குத் தவறா நாக்கு

வடிவாய் வாழ்வை வளப்படுத்தும்

 

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.

Related posts

கட்டார் முரண்பாடு; ரஷ்யா மீது சந்தேகிக்கும் அமெரிக்கா

wpengine

இன்று விசேட பாராளுமன்ற அமர்வு..!

Maash

கோத்தபாயவின் அரசியல் பயணம் இன்று

wpengine