பிரதான செய்திகள்

வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

மக்களின் நலன் கருதி வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை இணையத்தில் விரைவாகப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA), மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இ-வாகன வருமான அனுமதிப் பத்திரம் (eRL) திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

புதிய வாகன வருமான அனுமதிப் பத்திரத்தைப் பெறுதல் மற்றும் ஏற்கனவே உள்ள பத்திரத்தை (eRL) புதுப்பிக்கும் வசதி இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

ஒன்லைன் முறையின் மூலம் பத்திரத்தைப் பெறுவதற்கான நிதிக் கொடுப்பனவுகள் வங்கி அட்டைகள் மூலம் முன்னெடுக்கலாம் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புடைய தற்காலிக வருமான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகின்றது.

நிரந்தர வாகன வருமான அனுமதிப் பத்திரம் சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலம் பயனாளர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னார் மாவட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முக தேர்வின் முடிவுகள்

wpengine

நமீதாவின் செல்பி ஆசை

wpengine

10மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்

wpengine