செய்திகள்பிரதான செய்திகள்

வாகன இலக்கத் தகடுகளுக்கு பற்றாக்குறை , போக்குவரத்துத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் புதிய வாகனப் பதிவுச் செயற்பாடு இலக்கத் தகடுகளின் பற்றாக்குறையால் தாமதத்தை எதிர்நோக்குவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) உறுதிப்படுத்தியுள்ளது.

புதிய வாகன உரிமையாளர்களுக்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அனுப்பியுள்ள கடிதத்தில், தட்டுப்பாடு காரணமாக, நம்பர் பிளேட்கள் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்காலத் தீர்வாக, வாகன எண் அடங்கிய கடிதத்துடன், பதிவு செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்தும் கடிதத்துடன் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு திணைக்களம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.

இந்த தற்காலிக நடவடிக்கை ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் அமுலுக்கு வருவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியா குளத்தில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம்.!

Maash

பௌத்த பிக்குமாரின் பலத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்!தூக்கியறிய தயங்க மாட்டோம்.

wpengine

இந்திய விமான விபத்தில் பயணிகள், மருத்துவ மாணவர்கள் உட்பட மொத்தம் 246 பலி, ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்.

Maash