பிரதான செய்திகள்

வவுனியாவில் விபத்து! சுவிஸ் நாட்டை சேர்ந்தவர் மரணம்

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏ9 வீதியில் வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக நேற்று பிற்பகல் 1.45 மணியாவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து தெரியவருகையில்,

விமான நிலையத்திலிருந்து வவனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹயஸ் வான், வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பாரவூர்தியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஹயஸ் வாகன சாரதியான சுவிஸ் நாட்டைந் சேர்ந்த காந்தன் வயது 56 என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் படுகாயமடைந்த தர்சன் (26 வயது),அப்றஜிதன் (23வயது), கிரிதரன் (25வயது) ஆகியோர் படுகாயமடைந்து வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஆசாத் சாலிக்கு எதிராக CID விசாரணை குழு

wpengine

அநுராதபுரம் வைத்தியசாலையில் அவதிப்படும் நோயாளர்கள்!

Editor

பொதுபல சேனா,அமைச்சர் சம்பிக்க போன்றவர்கள் யார்? இப்றாஹிம் கேள்வி

wpengine